சினேகாவுக்குப் பிடித்த கதாநாயகன்

சினேகாவுக்குப் பிடித்த கதாநாயகன்

1 mins read
b8671568-6940-4ff8-a370-c81316735fdd
-

சினேகாவுக்குத் தற்போதுள்ள நாயகர்களில் மிகவும் பிடித்தவர் விஜய் சேதுபதியாம். முன்னணி நாயகர்களுடன் நடித்த சினேகா நடிகர் பிரசன்னாவைத் திருமணம் செய்து கொண்டார். குழந்தை பிறந்த பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ளார். முதலில் விளம்பரப் படங்களில் நடித்தவர் தற்போது மோகன் ராஜா இயக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இப்படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கிறார். இந்நிலையில் தொலைக்காட்சி நடன நிகழ்ச்சி ஒன்றில் நடுவராகச் செயல்படுகிறார் சினேகா. இதற்கான படப்பிடிப்பின்போது தற்போதுள்ள நாயகர்களில் பிடித்தவர் யார் என்று அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் விஜய் சேதுபதி எனக் கூறினார்.

"விஜய் சேதுபதி தேர்வு செய்யும் கதாபாத்திரமாகட்டும், அதற்கான வசன உச்சரிப்பாகட்டும் வெகு இயல்பாக உள்ளது. அதுதான் எனக்குப் பிடித்துள்ளது. இதை அவரிடமே நேரில் கூறியுள்ளேன்," என்கிறார் சினேகா.