தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நதியா: நிறைய நடிக்க வேண்டும் என்ற ஆசையில்லை

2 mins read
64b0c28f-49aa-4357-ac7d-4adf14ce3e77
-

துள­சி­தாஸ் இயக்கத்தில் ­­­மு­ழுக்க முழுக்க பெண்களே நடித்துள்ள 'திரைக்கு வராத கதை' என்ற படத்தில் நதியா, இனியா, கோவை சரளா, ஆர்த்தி ஆகியோர் முக்கிய கதா­பாத்­தி­ரங்களில் நடித்­துள்­ள­னர். இப்படத்தின் பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய நடிகை நதியா, "நான் நிறைய படங்களில் நடிப்­ப­தில்லை. பிடித்த கதைகள் மற்றும் கதா­பாத்­தி­ரங்களில் மட்டுமே நடிக்­கி­றேன். "'திரைக்கு வராத கதை' படத்­தில், ஒரு சமூக அக்கறை இருந்தது. இதில் போலிசாக நடித்து இருக்­கி­றேன். "1984ல் நடிக்க வந்தேன். இத்தனை ஆண்­டு­களில் இப்­போ­து­தான் 50வது படத்தை நெருங்­கி­யி­ருக்­கி­றேன். ஒரு படத்­துக்­கும் இன்னொரு படத்­துக்­கும் இடைவெளி இருப்­ பதைத் தவறாகப் புரிந்து கொண்டு, நதியா மீண் டும் நடிக்க வந்துவிட்டார் என்பது சரி­யல்ல. "நடிகை­களுக்கு வயது ஒரு தடையாக அமைந்து விடு­கிறது. அதையும் தாண்டி அவர்களுக்கு இளமை­யான தோற்றம் என்பது ஒரு வரம்.

"நான் தினமும் உடற்­ப­யிற்சி செய்­கி­றேன். நன்றாகச் சாப்­பி­டு­கி­றேன். ஆனால் நிறைய சாப்பிட மாட்டேன். வேறு ரக­சி­யம் எது வும் இல்லை. "நான் கதா­நா­ய­கி­யாக நடித்­துக்கொண்­டி­ருந்த காலத்­தில், கதா­நா­ய­கிகளுக்கு முக்­கி­ யத்­து­வம் உள்ள படங்கள் நிறைய வந்தன. "பின்னர் அந்த நிலை மாறி, கதா­நா­ய­கிகளை மையப்­படுத்­திய படங்கள் வர­வில்லை. இப்போது மீண்டும் கதா­நா­ய­கியை மையப்­படுத்­திய படங்கள் வர ஆரம்­பித்­துள்­ளன. "நான் ஒரு சோம்பேறி. நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இல்லை. நல்ல கதா­பாத்­தி­ரங்கள் என்னை தேடி வந்தால் மட்டுமே நடிக்­கி­றேன்," என்று நதியா கூறினார்.