'நெடுநல்வாடை' என்ற படத்தின் இயக்குநர் செல்வகண்ணன் அப்படத்தின் நாயகி அதிதி என்பவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் குற்றச்சாட்டு. மனம் வெதும்பிய நடிகை இரண்டு முறை உயிரை மாய்த்துக்கொள்ள முயன்று இருமுறையும் காப்பாற்றப்பட்டுவிட்டார். செல்வகண்ணன் மீது புகார் கொடுத்தும் கண்டுகொள்ளவில்லையாம் நடிகர் சங்கம். இந்நிலையில், சங்கச் செயலாளர் விஷால், சில தினங்களுக்கு முன் அதிதியை அழைத்துப் பேசியுள்ளார். "கவலைப்பட வேண்டாம். இவ்வளவு பிரச்சினைகள் இருப்பது முன்பே தெரியாமல் போய்விட்டது," என்றாராம். எப்படியாவது தமிழ்நாட்டிலிருந்து தப்பி சொந்த மாநிலமான கேரளாவுக்குப் போய்விட வேண்டும் என்று துடித்து வரும் அதிதியைச் சுற்றிச் சுற்றிக் கண்காணிக்கிறதாம் குண்டர் படை. இம்மாத இறுதியில் அதிதி நடித்த 'பட்டதாரி' என்ற படம் திரைக்கு வரப்போகிறது. அப்படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளுக்குப் போக முடியாதோ என்று அஞ்சுகிறாராம்.
அதிதிக்கு ஆறுதல் கூறிய விஷால்
1 mins read
-

