எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்தியுள்ள 'ரெமோ'

எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்தியுள்ள 'ரெமோ'

1 mins read

தெலுங்கு திரையுலகில் பிரபல விநியோகிப்பாளராக இருப்பவர் 'தில்' ராஜு. இவர் கடந்த ஆண்டு வெளிவந்த பிரம்மாண்ட படமான 'பாகுபலி'யை தெலுங்கில் வெளியிட்டவர். தமிழில் வெளியான 'தெறி' படத்தையும் வாங்கி வெளியிட்டுள்ளார். தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் நாளை வெளியாக உள்ள 'ரெமோ' படத்தின் தெலுங்கு வெளியீட்டு உரிமையையும் தில் ராஜு வாங்கியுள்ளார். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். பாக்கியராஜ் கண்ணன் இயக்கியுள்ளார்.