'ரோமியோ ஜூலியட்' படத்தை இயக்கிய லட்சுமண் இயக்கத்தில் தற்போது ஜெயம் ரவி நாயகனாக நடித்து வரும் படம் 'போகன்'. இவருக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்கிறார். இப்படத்திற்கு இசையமைப்பவர் இமான். பிரபுதேவா தயாரித்து வருகிறார். இறுதிக்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. விக்ரமாதித்யன் என்ற பாத்திரத்தில் அரவிந்த்சாமி நடிக்கிறார். இப்படத்துக்காக பாடல் ஒன்றையும் பாடியிருக்கிறாராம். முதல் முறையாக 'போகன்' படத்தின் மூலம் பாடகராகவும் அறிமுகமாக இருக்கிறார் அரவிந்த்சாமி என்பது குறிப்பிடத்தக்கது. "படத்தைப் பார்த்துவிட்டேன். மிகவும் அற்புதமாக வந்திருக்கிறது. கண்டிப்பாக ஜெயம் ரவிக்கு அடுத்த வெற்றியாக அப்படம் அமையும். அடுத்த மாதம் படம் வெளியாகும்," என்கிறார் இப்படத்தின் தயாரிப்பாளரான பிரபுதேவா.
பாடகராக மாறிய அரவிந்த்சாமி
1 mins read
-

