விஷால் அதிக சம்பளம் கொடுக்கச் சம்மதித்தும் ரகுல் ப்ரீத் சிங் 'துப்பறிவாளன்' படத்தில் இருந்து வெளியேறியுள்ளார். கால்ஷீட் பிரச்சினையால் வெளியேறியதாகக் கூறப்படுகிறது. அவருக்குப் பதிலாக மலையாள படங்களில் நடிக்கும் அனு இம்மானுவேலை ஒப்பந்தம் செய்யப் போவதாகவும் கூறப்படுகிறது. 'துப்பறிவாளன்' படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிக்க ரகுல் ப்ரீத் சிங் அதிக தொகையைச் சம்பளமாக கேட்டாராம். விஷாலும் அதைக் கேட்டு அதிர்ச்சி அடையாமல் கொடுக்க சம்மதித்தும் அவர் இந்த வாய்ப்பை நிராகரித்துள்ளார். ரகுல் ப்ரீத் சிங் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்து வரும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். மேலும் கை நிறைய தெலுங்குப் படங்கள் வைத்துள்ள அவருக்கு இப்படத்தில் நடிக்க கால்ஷீட்தான் பிரச்சினை என்று கூறப்படுகிறது. இது தவிர ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிக்க உள்ள சாமி படத்தின் இரண்டாம் பாகத்தில் அவருக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கவுள்ளதும் குறிப்பிடத் தக்கது.
விஷாலுடன் நடிக்க மறுத்த ப்ரீத் சிங்
1 mins read
-

