தமிழில் அறிமுகம் ஆன முதல் படத்தில் கவர்ச்சியாக நடித்த துடன் மட்டுமல்லாமல் சர்ச்சை யான கதாபாத்திரத்திலும் நடித்த வர் அமலா பால். இயக்குநர் விஜய்யுடன் திருமணமான பின்னர் கவர்ச்சி வேடங்களைத் தவிர்த்து வந்தார். அண்மையில் அமலா பால், விஜய் இருவரும் முறையாக விவாகரத்துப் பெற்று பிரிந்து வாழ முடிவெடுத்தனர். அதைத் தொடர்ந்து மீண்டும் கவர்ச்சி கடலில் இறங்க முடிவு செய்து ள்ளாராம். தற்போது நடித்து வரும் வடசென்னைப் படத்தில் படு கவர்ச்சியாக நடித்து வருகிறார் என்று தகவல்கள் வெளியாகி வந்தன.
இந்நிலையில், அதனை உறுதிப்படுத்தும் வகையில் இயக்குநர் வெற்றிமாறன் ஒரு தகவலைக் கூறியுள்ளார். தனுஷ் நடிக்கும் 'வடசென்னை' படத்தில், அமலா பால் மீனவ பெண்ணாக நடிப்ப தாகக் கூறப்பட்டது. ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார் அப்படத்தின் இயக்குநர் வெற்றிமாறன். "இப்படத்தில் அமலாபால் இதுவரை நடிக்காத, ஒரு வித்தியாசமான வடசென்னை பெண்ணாக நடிக்கி றார். அவரின் அக் கதாபாத்திரம் ஓரளவு கவர்ச்சியாகவும் இருக்கும்," என்று அவர் கூறினார்.

