முதன்முறையாக சூர்யாவுடன் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். சூர்யா தற்போது 'எஸ் 3' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. இப்படத்திற்கு கதாநாயகி தேடுதல் படலம் தீவிரமாக நடைபெற்று வந்தது. முதலில் நயன்தாராவை நடிக்க வைப்பதாக பேச்சு எழுந்தது. ஆனால், நயன்தாரா நடிக்க மறுத்துவிட்டதாக கூறப்பட்டது.
பின்னர், கீர்த்தி சுரேஷிடம் படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இந்நிலையில், அவரையே கதாநாயகியாக ஒப்பந்தம் செய்துள்ளனர். பாலிவுட்டில் அக்ஷய்குமார், அனுபம் கோர் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த 'ஸ்பெஷல் 26' படத்தின் மறுபதிப்புதான் இந்த 'தானா சேர்ந்த கூட்டம்'. இந்தியில் பெரும் வெற்றி பெற்ற நிலையில், தமிழில் சில மாற்றங்கள் செய்து உருவாக்குகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பை அடுத்த வாரம் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

