'கிடாரி' படத்தைத் தொடர்ந்து சசிகுமார் நடிக்கும் புதிய படம் குறித்த தகவல்கள் வெளி வந்துள்ளது. தன்னுடைய 'கம்பெனி புரொ டக் ஷன்ஸ்' நிறுவனம் மூலமாக மீண்டும் புதிய படமொன்றை பிரம்மாண்டமாகத் தயாரித்து, அதில் கதாநாயகனாக நடிக்கிறார். இயக்குநர்கள் பாலா, சுதா கொங்காராவிடம் உதவி இயக்கு நராகப் பணிபுரிந்த பி.பிரகாஷ் இந்தப் படத்தின் மூலம் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் சங்கிலி முருகன், கோவை சரளா, ரோகினி உள் ளிட்ட பலர் நடிக்கின்றனர். "அனைத்துத் தரப்பு ரசிகர்க ளும் ரசிக்கும் வண்ணம் இந்தப் படம் மிகவும் ஜனரஞ்சகமான முறையில் எடுக்கப்பட உள்ளது," என்கிறார் பிரகாஷ்.
இந்தப் படத்துக்கு தர்புகா சிவா இசையமைக்கிறார். 'ஐவ ராட்டம்', 'உறுமீன்' படங்களின் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய ரவிந்திரநாத் குரு ஒளிப்பதிவு செய்கிறார். சசிகுமார் நாயகன் என முடிவாகிவிட்ட நிலையில், இதர நடிகர் நடிகையர், தொழில் நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. "'கிடாரி'க்கு எதிர்பார்த்த ஆதரவு கிடைத்தது. அதேபோல் இப்புதிய படத்துக்கும் வரவேற்பு கிடைக்கும். ஏனெனில் நல்ல படைப்புகளை ரசிகர்கள் கைவிட மாட்டார்கள் என உறுதியாக நம்பு கிறேன்," என்கிறார் சசிகுமார்.
'கிடாரி' படத்தின் ஒரு காட்சியில் சசிகுமார், நிகிலா.

