பட்டையைக் கிளப்பப் போகும் விஜய்

பட்டையைக் கிளப்பப் போகும் விஜய்

1 mins read
52ccbf9f-43bf-4058-9d26-1a126d391c6a
-

விஜய் தற்போது பரதன் இயக்கத்தில் 'பைரவா' படத்தில் நடித்து வருகிறார். பொதுவாக விஜய் நடிக்கும் படங்களில் அவரது அறிமுகப் பாடல் பெரியளவில் வரவேற்புப் பெறும். அந்த வகையில் படக்குழுவினரும் விஜய்யின் அறிமுகப் பாடலை மிகவும் பிரம்மாண்டமாகவும் அதேநேரத்தில் அனைவரையும் கவரும் வகையிலும் படமாக்குவர்.

அதேபோல், விஜய் தற்போது நடித்து வரும் 'பைரவா' படத்திலும் விஜய்யின் அறிமுகப் பாடலை மிகவும் அசத்தலாகப் படமாக்கி உள்ளார்களாம். சந்தோஷ் நாராயணன் இசையில் அமைந்துள்ள இப்பாடலின் முதல் வரி தற்போது வெளியாகியுள்ளது. 'பட்டைய கிளப்பு, பட்டைய கிளப்பு, பட்டி தொட்டியெல்லாம் பட்டைய கிளப்பு' என்று இந்தப் பாடல் தொடங்குகிறது. இந்தப் படத்தில் மொத்தம் 5 பாடல்கள் உள்ளன. அனைத்தையும் வைரமுத்துவே எழுதியுள்ளார்.