திரையுலகில் சாதிப்பதற்குத் தனது காதலர் உதவியாக இருப்பதாகச் சொல்கிறார் நடிகை இலியானா. "ஆண்ட்ரூவை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் திறமையானவர். உறுதியான மன நிலையைக் கொண்டவர். எல்லா விஷயங்களையும் தெரிந்து வைத்து இருக்கிறார். "அவருடைய புத்திசாலித்தனத்தைப் பார்த்து வியந்து இருக்கிறேன். மற்றவர்களை விட தனித்திறமைகள் கொண்டவர். என்னுடைய சினிமா தொழிலுக்கு மிகவும் உதவியாக இருக்கிறார்.
"நான் நடித்த எல்லா படங்களையும் பார்த்துவிட்டார். எனது நடிப்பை மனதாரப் பாராட்டுவார். எனக்கு வருத்தம் வருவது மாதிரி எந்தக் கருத்தும் சொல்வது இல்லை. உற்சாகம் அளிப்பது போலவே பேசுவார். "சினிமாவில் சாதிப்பதற்கு அவர் ஊக்கப்படுத்துகிறார். ஆண்ட்ரூ வோடு இருந்தால் நேரம் போவதே தெரியாது. அவர் எனது வாழ்க் கையில் வந்த பிறகு மகிழ்ச்சியாக உள்ளேன்," என்கிறார் இலியானா.

