'கொடி' படத்துக்கு யு சான்றிதழ்; 28ஆம் தேதி வெளியீடு

'கொடி' படத்துக்கு யு சான்றிதழ்; 28ஆம் தேதி வெளியீடு

1 mins read
8ab2439a-5029-4ecf-831b-6e9487ac6144
-
Google News Preferred Icon

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'கொடி' படத்துக்குத் தணிக்கையில் 'யு' சான்றிதழ் கிடைத்திருக்கிறது. அக்டோபர் 28ஆம் தேதி இப்படம் வெளியாகிறது. துரை.செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ், திரிஷா, அனுபமா பரமேஸ்வரன், சரண்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இயக்குநர் வெற்றிமாறன் தயாரித்திருக்கிறார். எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது. முதன்முறையாக இதில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார் தனுஷ். அதனால் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.