'இவன் தந்திரன்'

'இவன் தந்திரன்'

2 mins read
0e7cbe4b-a5e2-4e8b-bb24-fc19a499e2ec
-

இயக்குநர் ஆர்.கண்ணன் இயக்கத் தில், கௌதம் கார்த்திக் நாயகனாக நடிக்கும் படம் 'இவன் தந்திரன்'. கண்ணன் இயக்கத்தில் உருவாகி உள்ளது. இளையர்களின் வாழ்வியல் குறித்த சில விஷயங்களைக் காட்சிப்படுத்தி உள்ளனராம். "படித்த இளைஞர்களுக்கு வெளி நாடுகளில் நல்ல எதிர்காலம் இருக்கி றது. ஆனால் உள்நாட்டில் அவர்க ளுக்கு உரிய அங்கீகாரம் கிடைப்ப தில்லை. இதுபோன்ற இளைஞர்களின் அனுபவங்களை வெளியுலகுக்குச் சொல்லவேண்டும். அதனால்தான் விறுவிறுப்பான திரைக்கதையுடன் இப்படத்தை உருவாக்க நினைத்தேன்," என்கிறார் கண்ணன். தலைப்பு வித்தியாசமாக உள்ளதே? "என்னைப் பொறுத்தவரை ஒவ் வொரு கதையும் ஒவ்வொரு விதை.

காற்று, தண்ணீர், சூரிய ஒளியைக் கொண்டு மரங்களில் பூக்கும் பூக்கள் ஒரு வகை. ஆளில்லாத காட்டில் தானாகவே வளர்ந்து வரும் மரங்களில் பூக்கும் பூக்கள் மற்றொரு வகை. "இதை மனதில் வைத்துத்தான் வாழ்க்கையில் பல சிரமங்களை முட்டி மோதி, நேர்த்தியாக தானாக வளர்ந்து வரும் கதாபாத்திரங்களைக் கொண்டு இப்படத்தை உருவாக்கி இருக்கிறேன். "கௌதம் கார்த்திக், ஆர்ஜே. பாலாஜி, ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஆகிய 3 பாத்திரங்களின் கதை இதில் இருக் கும். இவர்கள் மூவரும் தாங்கள் பயின்ற கல்வியைப் பயன்படுத்தி நிறைய நல்ல காரியங்கள் செய்வார்கள். இதனால் அவர்களுக்கு ஏற்படும் இடையூறுகள், அதைச் சமாளிக்கும் விதம் எனக் கதை பயணிக்கும். "இன்றைய இளையர்கள் சந்திக்கும் சிரமங்களை இப்படம் சொல்லும். கிட்டத்தட்ட இரண்டு வருடமாக நான் திரட்டிய அனைத்து விஷயங்களும் இதில் இடம்பெற்றுள்ளன. 'இவன் தந்திரன்' படத்தில் கௌதம் கார்த்திக், ஷ்ரத்தா.