'ரோமியோ ஜூலியட்' படத்தில் ஜெயம் ரவியுடன் ஜோடி சேர்ந்த ஹன்சிகாவின் நடிப்பு பிரமாதமாக இருந்தபோதும் அதன்பிறகு அவருக்குப் பெரிதாகப் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்நிலையில், 'ரோமியோ ஜூலியட்' லட்சுமணன் தனது 'போகன்' படத்திலும் அவருக்கு வாய்ப்புக் கொடுத்துள்ளார். இதன் படப்பிடிப்பின்போது, லட்சுமணின் நம்பிக்கை பொய்யாக்காத வண் ணம் ஹன்சிகாவின் நடிப்பு பிரமா தமாக இருந்ததாகப் படக்குழுவினர் பெருமையாகக் கூறி வருகின்றனர். இத்தகவல் கோலிவுட் வட்டாரத்தில் பரவத் தொடங்கியதும் இதுவரை ஹன்சிகாவைக் கண்டுகொள்ளாமல் அவரை ஒதுக்கி வைத்திருந்த இயக்குநர்கள் இப்போது அவர் பக்கம் திரும்பியுள்ளனர்.
முக்கியமாக சில புதுமுக இயக்குநர்கள் அவரைத் தொடர்புகொண்டு கதாநாயகிக்கு முக்கியத்துவமுள்ள கதைகளைச் சொல்லி வருகிறார்களாம். இதனால் தமிழ் சினிமா மீது நம்பிக்கை இழந்து ஆந்திராவில் மையம் கொண்டிருந்த ஹன்சிகாவுக்கு இப்போது தமிழ்ப் படங்கள் மீது மறுபடியும் நம்பிக்கை துளிர்விட்டிருக்கிறதாம். அதனால் 'போகன்' வெளியான பிறகு நயன்தாரா, அனுஷ்கா, திரிஷா பாணியில் ஹன்சிகா வும் கதையின் நாயகியாக உருவெடுப்பார் எனக் கூறப்படுகிறது. இதற்கிடையே, என்னதான் தமிழ்ப் படங் களில் நடித்தாலும் தான் தமிழில் பேசத் தயங்கு வதற்கு வார்த்தைகளைத் தவறாக உச்சரித்து விட்டால் அர்த்தம் மாறிவிடும் என்ற பயம்தான் காரணம் என பேட்டி ஒன்றில் அவர் கூறியுள்ளார்.

