கதை நாயகி ஹன்சிகா

கதை நாயகி ஹன்சிகா

1 mins read
26c1c5ad-8ed9-4342-ab82-2a69ed70056f
-

'ரோமியோ ஜூலியட்' படத்­தில் ஜெயம் ­ர­வி­யு­டன் ஜோடி சேர்ந்த ஹன்­சி­கா­வின் நடிப்பு பிர­மா­த­மாக இருந்தபோதும் அதன்­பி­றகு அவ­ருக்­குப் பெரிதாகப் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்­நிலை­யில், 'ரோமியோ ஜூலியட்' லட்­சு­ம­ணன் தனது 'போகன்' படத்­தி­லும் அவ­ருக்கு வாய்ப்­புக் கொடுத்­துள்­ளார். இதன் படப்பிடிப்பின்போது, லட்­சு­ம­ணின் நம்­பிக்கை பொய்யாக்காத வண் ணம் ஹன்­சி­கா­வின் நடிப்பு பிரமா தமாக இருந்ததாகப் படக்­கு­ழு­வி­னர் பெருமை­யாகக் கூறி வருகின்றனர். இத்­த­க­வல் கோலிவுட் வட்­டா­ரத்­தில் பரவத் தொடங்­கி­ய­தும் இதுவரை ஹன்­சி­காவைக் கண்­டு­கொள்­ளா­மல் அவரை ஒதுக்கி வைத்திருந்த இயக்­கு­நர்­கள் இப்போது அவர் பக்கம் திரும்­பி­யுள்­ள­னர்.

முக்­கி­ய­மாக சில புதுமுக இயக்­கு­நர்­கள் அவரைத் தொடர்புகொண்டு கதா­நா­ய­கிக்கு முக்­கி­யத்­து­வ­முள்ள கதை­களைச் சொல்லி வரு­கிறார்­க­ளாம். இதனால் தமிழ் சினிமா மீது நம்­பிக்கை­ இ­ழந்து ஆந்­தி­ரா­வில் மையம் கொண்­டி­ருந்த ஹன்­சி­கா­வுக்கு இப்போது தமிழ்ப் படங்கள் மீது மறு­ப­டி­யும் நம்­பிக்கை துளிர்விட்­டி­ருக்­கிற­தாம். அதனால் 'போகன்' வெளியான பிறகு நயன்­தாரா, அனுஷ்கா, திரிஷா பாணியில் ஹன்­சி­கா ­வும் கதையின் நாய­கி­யாக உரு­வெ­டுப்­பார் எனக் கூறப்படுகிறது. இதற்கிடையே, என்னதான் தமிழ்ப் படங் களில் நடித்தாலும் தான் தமிழில் பேசத் தயங்கு வதற்கு வார்த்தைகளைத் தவறாக உச்சரித்து விட்டால் அர்த்தம் மாறிவிடும் என்ற பயம்தான் காரணம் என பேட்டி ஒன்றில் அவர் கூறியுள்ளார்.