பணத்தைப் பற்றிய ஒரு பயணம்தான் 'ரூபாய்' என்று அதன் கதைக்களம் குறித்து இயக்குநர் அன்பழகன் தெரிவித்துள்ளார். சந்திரன், ஆனந்தி, சின்னி ஜெயந்த், கிஷோர், ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய படம் 'ரூபாய்'. இமான் இசையமைத்திருக்கும் இப்படத்தை அன்பழகன் இயக்கி இருக்கிறார். பிரபு சாலமன் தயாரித்துள்ளார். "இதற்கு முன் நான் பணியாற்றிய எனது முதல் படமான 'சாட்டை'க்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருந் தது. என்னைப் பொறுத்தவரையில் இதுவும் கூட எனது முதல் படம் தான். ஏனென்றால் 'சாட்டை' வேறு கதைக்களம், இது வேறொரு கதைக் களம்.
"பணத்தாசைதான் எல்லா தீமைகளுக்கும் ஆணி வேர். தேனியில் லாரி ஓட்டுநராக இருக்கும் பரணி - பாபு இருவரும் நண்பர்கள். அவர்க ளுக்கு இந்த உலகத்தில் இருக்கும் ஒரே சொத்து, சொந்தம் எல்லாமே ஒரு லாரி மட்டும்தான். அந்த லாரிக்குப் பணம் கட்ட ஒரு பெரிய சவாரியாக கோயம்பேடு மார்க்கெட் வருகிறார்கள். "ஊர் திரும்பும் போது அவர்களுக்கு ஏற்பட்ட சின்ன பணத்தாசையால் ஒரு பிரச்சினையில் சிக்கிக்கொள்கிறார் கள். அதிலிருந்து அவர்கள் மீண்டு ஊருக்குப் போனார்களா இல்லையா என்பதுதான் படத்தின் திரைக்கதை.
"பணம் நிம்மதி தராது என்று எந்த ஓர் ஏழையும் சொல்வதில்லை. நிம்மதி தராத பணம் தேவையில்லை என்று எந்தப் பணக்காரனும் பணத்தை ஒதுக்குவதும் இல்லை. "இப்படி எல்லோரது வாழ்க்கையிலும் மிக அத்தியாவசியமாகிப்போன பணத்தைப் பற்றிய ஒரு பயணம்தான் இந்த 'ரூபாய்' திரைப்படம். "இதை நகைச்சுவையும் காதலும் கலந்த படைப்பாக உருவாக்கி உள் ளோம். படப்பிடிப்பு சென்னை, மூணார், மறையூர், தேனி போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது. படம் ரசிகர்களை நிச்சயம் கவரும்," என்கிறார் இயக் குநர் அன்பழகன்.
'ரூபாய்' படத்தில் இடம்பெறும் ஒரு காட்சியில் சந்திரன், ஆனந்தி.

