யதார்த்தமான படமாக உருவாகி உள்ளது 'ரங்கராட்டினம்'

யதார்த்தமான படமாக உருவாகி உள்ளது 'ரங்கராட்டினம்'

1 mins read
be269a99-387c-4703-bc31-495dacd79004
-

'திட்டக்குடி' படத்தை இயக்கிய சுந்தரன் தற்போது இயக்கும் புதிய படம் 'ரங்கராட்டினம்'. கதாநாயகன் மகேந்திரன். நாயகியாக நடிப்பவர் ‌ஷில்பா. இவர்களுடன் 'நான் கடவுள்' ராஜேந்திரன், முனைவர் கு.ஞானசம்பந்தன், சென்ராயன், வினோதினி, 'பசங்க' சிவக்குமார், தவசி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்."ராட்டினம் என்பது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் மகிழ்விக்கும் ஒரு விளையாட்டு சாதனம்.

அதேபோல் தான் காதலும். காதல் தரும் உற்சாகத்தை இப்படம் சொல்லும். 'நான் கடவுள்' ராஜேந்திரன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். "திருவண்ணாமலை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தி உள்ளோம். மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார் இரண்டு பாடல்களை எழுதி கொடுத்திருந்தார். யதார்த்தமான கதையாக 'ரங்கராட்டினம்' படத்தை இயக்கி இருக்கிறேன்," என்கிறார் சுந்தரன்.