விவேகமற்ற அநாகரிகச் செயல்: கமல் கோபம்

விவேகமற்ற அநாகரிகச் செயல்: கமல் கோபம்

1 mins read
66773434-d629-46af-ae12-6426740769ef
-

கவுதமி பிரிவு குறித்து தற்போ தைய சூழ்நிலையில் அறிக்கை எதுவும் வெளியிடப்போவதில்லை என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்திருக்கிறார். நடிகர் கமல்ஹாசனும் கவு தமியும் கடந்த பதின்மூன்று ஆண்டு காலமாக ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், கமல்ஹாசனுடன் சேர்ந்து வாழ்ந்த வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து, அவரை விட்டுப் பிரிவதாக நடிகை கவுதமி அறிவித்தார்.

இதையடுத்து, கவுதமியின் பிரிவு குறித்து கமல் அறிக்கை வெளியிட்டதாக சமூக வலைத் தளங்களில் பல்வேறு தகவல்கள் வேகமாகப் பரவின. இந்நிலையில் கவுதமி பிரிவு குறித்து தாம் எந்த அறிக்கையும் வெளியிட வில்லை எனத் தனது டுவிட்டர் பக்கத்தில் மறுப்புத் தெரிவித் திருக்கிறார் கமல். "இத்தருணத்தில் என் பெயரால் யாரோ அறிக்கை விட்டு விளையாடுவது விவேகமற்ற அநாகரிகச் செயல். நான் இச் சமயம் அறிக்கை ஏதும் வெளி யிடுவதாய் இல்லை," எனத் தமது சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார் கமல்.