நகைச்சுவை கலந்த பேய் படங்களை எடுக்கும் போக்கு தமிழ்த் திரையுலகில் அதிகரித்து வருகிறது. அண்மையில் வெளியான 'காஷ்மோரா' படத்தைத் தொடர்ந்து அப்பட்டியலில் சேர்ந்திருக்கும் படம் 'மோ'. நல்லான் இயக்கும் இப்படத்தில் சுரேஷ் ரவி, ஐஸ்வர்யா ராஜேஷ், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இம்மாதம் 18ஆம் தேதி வெளியாக இருக்கும் இப்படம் குறித்து இயக்குநர் புவன்.ஆர்.நல்லான், "'மோ' ஒரு நகைச் சுவை பேய் படம். இதில் ஐஸ்வர்யா ராஜேஷைச் சுற்றித்தான் கதையே இருக்கும். அவர்தான் பேயாக வருவார். "ஐஸ்வர்யா ராஜேஷ் மிகவும் பயந்துபோய் விபூதியெல்லாம் வைத்துக்கொண்டுதான் தினமும் படப்பிடிப்புக்கே வருவார்.
பேயான ஐஸ்வர்யா ராஜேஷ்
1 mins read
-

