தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அஜித்தின் புகழ் பாடும் காஜல்

1 mins read
924fd30e-7d85-4575-9d02-1217f4609464
-

அஜித்துடன் நாயகியாக நடிக்கும் காஜல், 'தல' மிகவும் மரியாதையானவர், அற்புதமான மனிதர் என்று புகழ்ந்து தள்ளியுள்ளார். சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில் 'கவலை வேண் டாம்' படத்தை விளம்பரப்படுத்த சென்னை வந்திருந்தார் காஜல் அகர்வால். அவரிடம் அஜித்துடன் நாயகியாக நடிப்பது குறித்துக் கேட்கப்பட்டது.

"என்னால் அவரைப் புகழ்வதை நிறுத்தமுடியாது. ஏனென்றால் அவர் மீது அதிக மரியாதை வைத்துள்ளேன். அந்த மனிதரைப் பார்த்து மெச்சுகிறேன். "அவரது நடிப்புக்கு மட்டுமல்ல; ஒரு மனிதராக அவரிடம் அதிக மரியாதை கொண்டுள்ளேன். அவர் அற்புதமானவர், அவரோடு பணியாற்றியதும் அற்புதமான அனுபவமாக இருந்தது.