தமன்னா: பிரபுதேவா ஒரு நடனக் கடவுள்

தமன்னா: பிரபுதேவா ஒரு நடனக் கடவுள்

1 mins read
a77ca6d5-6a66-4039-b53f-efd70c1d42b4
-

உங்களது நடனத்தைப் பலரும் பாராட்டி உள்ளார்களே என்ற கேள்விக்குப் பதிலளித்த தமன்னா, "ஆம்... இதற்குப் பிரபுதேவா சாருக்குத்தான் பெரிய நன்றியைக் கூற வேண்டும். அவரது நடனம் குறித்து நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அவர் எனக்கு நடனக் கடவுள். ஒரு நடனக் கடவுளே நேரில் வந்து நடனம் சொல்லிக் கொடுத்தது என்றே கூற வேண்டும். நடனத்தில் பல நுணுக்கங்கள் உண்டு. நன்கு கற்றுக்கொடுத்தாலும் கூட, முறையாகப் பயிற்சி பெறவில்லை எனில் சரியாக நடனமாட முடியாது.

"சிரமமான நடன அசைவுகளையும் கூட எனக்குச் சுலபமாகக் கற்றுக்கொடுத்தார் பிரபுதேவா. கிட்டத்தட்ட 12 ஆண்டுக ளுக்குப் பிறகு அவர் நாயகனாக தமிழில் மறுபிரவேசம் செய்திருக்கிறார். "அவருடைய படத்தில் நானும் பங்காற்றியுள்ளேன் என்று நினைக்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. 'தேவி' படத்தில் வரும் 'சல்மார்' பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாட்டு