தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

'வேலையில்லா பட்டதாரி' 2ஆம் பாகம்

1 mins read
4df61c2c-2c8e-4b8e-9429-6898e2b6d399
-

வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து 2014ஆம் ஆண்டு வெளிவந்த 'வேலையில்லா பட்டதாரி' படம் பெரிய வெற்றியைப் பெற்றது. தனு‌ஷின் 25ஆவது படமாக வெளிவந்த இப்படத்தின் கதை மட்டுமல்லாது அனிருத் தின் பாடல்களும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகுமா என்று ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

அதைப் பூர்த்தி செய்யும் வகையில் தனுஷ் தனது அடுத்த படத்தைப் பற்றிய புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, 'வேலையில்லா பட்டதாரி' படத்தின் இரண்டாம் பாகத்தைக் கலைப்புலி எஸ்.தாணுவும், தனு‌ஷுடன் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்க முடிவாகியுள்ளது. இப்படத்தை ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்குகிறார்.