மறைந்த நா. முத்துக்குமார் மகனுக்குக் கௌரவம்

மறைந்த நா. முத்துக்குமார் மகனுக்குக் கௌரவம்

1 mins read
19d7df47-1619-4eef-aed3-48b6273190c8
-

தமிழ், தெலுங்கு, இந்தியில் ஒரே நேரத்தில் வெளியான 'தேவி' திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதன் வெற்றி விழா சென்னையில் நடந்தது. இந்தப் படத்தில் நடித்த பிரபுதேவா, தமன்னா, ஆர்.ஜே. பாலாஜி, சதீஷ், சோனுசூட் ஆகியோர் கேடயங்கள் வழங்கி சிறப்பிக்கப்பட்டனர். இந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களையும் காலஞ்சென்ற நா. முத்துக்குமார் எழுதியிருந்தார். அவருக்கு வழங்க வேண்டிய கேடயத்தை நா. முத்துக்குமார் மகன் ஆதவன் மேடைக்கு வந்து பெற்றுக்கொண்டார். அப்போது அரங்கத்தில் இருந்த அனைவரும் எழுந்து நின்று கரவொலி எழுப்பினார்கள். இது அவருக்குக் கௌரவம் அளிக்கும் நெகிழ்ச்சியான தருணமாக இருந்தது.