தீர்ந்தது சிக்கல்; சிவா நிம்மதி

தீர்ந்தது சிக்கல்; சிவா நிம்மதி

1 mins read
fbb2b5f6-68b8-4662-8ff0-b0002d44fb3e
-

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவரும் படம்,அடுத்தாண்டு விநாயகர் சதுர்த்திக்கு வெளியாகும் எனப் படக்குழு அறிவித் திருக்கிறது. 24 ஏ.எம். நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக வெளியான 'ரெமோ' வசூல் ரீதியில் பெரும் வரவேற்புப் பெற்றிருக் கிறது. 'ரெமோ' இறுதிக் கட்ட பணிகளின் போதே, மோகன் ராஜா இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தின் வழிபாடு நடைபெற்றது.

சிவகார்த்திகேயன், நயன்தாரா, பகத் பாசில், ஆர்.ஜே.பாலாஜி, பிரகாஷ்ராஜ், சினேகா, ரோகிணி, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் இப்படத் துக்காக ஒப்பந்தம் செய்யப் பட்டனர். அனிருத் இசையமைப்பாள ராக ஒப்பந்தமானார். இதற்குப் பின்னணி காரணம் சிவா தான் என்பது சொல்லித் தெரியவேண்டி யது இல்லை.