சந்தேகம் கிளப்பும் மரணம்

சந்தேகம் கிளப்பும் மரணம்

1 mins read
79db841c-8158-4b63-a15c-acc9027fe094
-

சபர்ணா மரணத்தில் சந்தேகம் இருக்கிறது என்று அவரது தந்தை ஆனந்த்குமார் கூறியுள்ளார். சபர்ணா அண்மையில் தன் உயிரை மாய்த்துக்கொண்டார். இதற்கு மன அழுத்தமே காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. "என் மகளின் அறையில் சிகரெட் துண்டுகளும், மதுப்புட்டி களும் இருந்ததாக போலிசார் தெரிவித்தனர். அதுவே எங்களுக்கு சபர்ணாவின் மரணத்தில் சந்தே கத்தை எழுப்பியுள்ளது. அவளுக்கு எந்தவித தீய பழக்கங்களும் கிடையாது. மேலும் அவளது கைபேசியையும் காணவில்லை. "சபர்ணாவுக்கு மாப்பிள்ளை பார்க்க தொடங்கி இருந்தோம். இந்த நிலையில் அவளது மரணம் மிகுந்த மனவேதனை அளித்துள் ளது," என்கிறார் சபர்ணாவின் தந்தை ஆனந்த்குமார். இது குறித்து அவர் காவல் துறையில் புகார் அளிக்கப்போவ தாகவும் கூறியுள்ளார்.