உடல் எடையைக் குறைக்கும் சூர்யா

உடல் எடையைக் குறைக்கும் சூர்யா

1 mins read

சூர்யா மீண்டும் தனது உடல் எடை யைக் குறைக்கப் போவதாகக் கூறப் படுகிறது. தற்போது ஹரி இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'எஸ் 3' படத்தில் நடித்து முடித்திருக்கும் அவர், அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் நடிக்கிறார். இதில் அவருக்கு ஜோடி கீர்த்தி சுரேஷ். படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ள நிலையில், இப்படத்திற்காக சூர்யா தனது உடல் எடையைக் குறைக்கப்போகிறாராம். சுமார் பத்து கிலோ வரை தனது எடையைக் குறைத்து அவர் நடிக்கப்போவதாகவும் கூறப்படுகிறது. கடைசியாக 'வாரணம் ஆயிரம்' படத்திற்காக உடல் எடை யைக் குறைத்தார் சூர்யா.