சுவாதி: அவசரம் இல்லை

சுவாதி: அவசரம் இல்லை

1 mins read
8f86d9f5-c6e3-4172-a145-4c944f8dbc67
-

எத்தனை படங்கள் நடித்திருந்தாலும் தன்னை 'சுப்பிரமணிய புரம்' சுவாதி என்றுதான் அனைவரும் அழைக்கிறார் கள் என்றும் அந்த அடையாளம் தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறுகிறார் நடிகை சுவாதி. தற்போது கிருஷ்ணா நாயகனாக நடிக்கும் 'யாக்கை' படத்தில் நடிக்கி றார் சுவாதி. பெரிய இடைவெளிக்குப் பிறகு நடித்தால் ரசிகர்கள் மறந்துவிட மாட்டார்களா? "தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளிலும் நடிக்கிறேன். "ஒரே மொழியில் தொடர்ச்சியாக நடிப்ப தில்லை. அதனால் தான் நான் அதிக படங்களில் நடிப்பது இல்லை எனும் தோற்றம் ஏற்பட்டுள்ளது. "குறுகிய காலத்தில் இருபத்தைந்துக்கும் மேற்பட்ட படங்களில் தொடர்ச்சியாக நடித்திருக்கிறேன். இனிமேல் பெயர் சொல்லும் படியான நல்ல வேடங்களில்தான் நடிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். தமிழில் இப்போது நடிக்கும் 'யாக்கை', 'திரி' ஆகிய இரண்டிலுமே நல்ல கதாபாத்திரங்கள்."