இசைக் கலைஞர் பாலமுரளி கிருஷ்ணா காலமானார்

இசைக் கலைஞர் பாலமுரளி கிருஷ்ணா காலமானார்

1 mins read
4a759af6-9268-4c6a-8880-2980b917bacf
-

சென்னை: இசைக் கலைஞர் பாலமுரளி கிருஷ்ணா உடல்நலக்குறைவு காரணமாக நேற்று சென்னை மையிலாப்பூரில் உள்ள தனது இல்லத்தில் காலமானார். சிறந்த இசையமைப்பாளர், பாடகருக்காக இரு முறை தேசிய விருது பெற்றவர் பாலமுரளி கிருஷ்ணா. பத்ம விபூஷன், பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியே விருதுகளையும் அவர் பெற்றுள்ளார். சங்கீத கலாநிதி, சங்கீத கலாசிகாமணி உள்ளிட்ட பட்டங்களைப் பெற்றவர். 86 வயதான திரு பாலமுரளி கிருஷ்ணா 1930ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் சந்திரகுப்தம் என்னும் இடத்தில் பிறந்தார். 6 வயது முதலே தனது இசைப் பயணத்தைத் தொடங்கிய அவருக்கு முதலில் திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு தான் கிடைத்தது. பின்னர் பாடகராக அறிமுகமாகி ஏராளமான பாடல்கள் பாடி முத்திரை பதித்தார். 25,000க்கும் மேற்பட்ட கச்சேரிகள் நிகழ்த்தியுள்ள அவர், 400க்கும் மேற்பட்ட பாடல்களுக்குத் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் இசையமைத்துள்ளார்.