'மணமான நாயகிகளால்தான் திறமையாக நடிக்க முடியும்'

1 mins read
cf7235a1-8c79-4bed-855f-368892763ab5
-

திருமணமான கதாநாயகிகளால் தான் திறமையாக நடிக்க முடியும் என்று ஜெனிலியா கூறியுள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் ஜெனிலியா. இவ ருக்கும் இந்தி நடிகர் ரிதேஷ் தேஷ்முக்குக்கும் 2012ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளன. இந்தியில் 'போர்ஸ் 2' என்ற படத்தில் கௌரவ வேடத்தில் தோன்றினார். குழந்தை பெற்ற பிறகு சினிமாவில் வரவேற்பு இருக்குமா என்று ஜெனிலி யாவிடம் கேட்கப்பட்டது. அப் போது அவர், "மணமான, குழந்தை பெற்ற நடிகை என்றெல்லாம் ஒதுக்கக் கூடாது. அவர்களாலும் மற்றவர்களைப் போல் சிறப்பாக நடிக்க முடியும். எ ன் னை ப் பொ று த் த வ ரை வயதான பிறகுதான் நடிகர்க ளுக்குத் திறமை வருகிறது.