இயக்குநர் விஜய்யுடனான மண முறிவுக்குப் பின்னர் அமலாபால் பல படங்களில் நாயகியாக ஒப்பந்தமாகி வருகிறார். அதன்படி, வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் 'வடசென்னை' படத்தில் நடித்து வரும் அமலாபால், சௌந்தர்யா ரஜினி இயக்கும் 'விஐபி=2' மற்றும் சுசிகணேசன் இயக்கத்தில் 'திருட்டுப் பயலே=2' ஆகிய படங்களிலும் ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில், விஷ்ணு விஷால் நடிக்கவிருக்கும் புதிய படத்திலும் நாயகியாக அமலாபால் ஒப்பந்தமாகியுள்ளார். விஷ்ணு விஷால் அடுத்ததாக 'முண்டாசுப்பட்டி' இயக்குநர் ராம்குமார் இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார். இதில் கதாநாயகியாக அமலாபால் நடிக்கவுள்ளார்.
விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாகிறார் அமலாபால்
1 mins read
-

