சென்னை: நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவரான சரத்குமார் ஊழல் செய்ததை ஆதாரங்களுடன் நிரூபிக்க இயலுமா? என அச்சங் கத்தின் நடப்பு பொருளாளர் கார்த்திக்கு நடிகை ராதிகா சவால் விடுத்துள்ளார். சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர் ஆகிய மூவரையும் நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கி யது நீதிமன்ற அவமதிப்பு என்றும் அவர் கூறியுள்ளார். "சங்க உறுப்பினர்களை எப்படி நீங்கள் இடைநீக்கம் செய்யலாம்? இரு தரப்பும் கலந்தாலோசிக்காமல் எடுக்கப்பட்ட முடிவு நீதிமன்ற அவமதிப்பாகும்.
"நடிகர் சங்கம் சிவாஜி கணே சனால் நிறுவப்பட்டது. அறங்காவ லரின் குடும்பத்தினர் மட்டுமே அதில் தொடர வேண்டும் என்ற விதி இருந்தது. அதை நடிகர் எஸ்.எஸ்.ஆர் பிறகு திரும்பப் பெற்றார். அப்படியென்றால் அவர் குற்றவாளியா?" என்று ராதிகா கேள்வி எழுப்பியுள்ளார்.

