காதலர் தினத்தில் வெளியாகும் தனு‌ஷின் புதிய படம்

காதலர் தினத்தில் வெளியாகும் தனு‌ஷின் புதிய படம்

1 mins read
0b7f98a7-0008-48ca-a186-c78048f48cdc
-

'எனை நோக்கிப் பாயும் தோட்டா' அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி அன்று காதலர் தின வெளியீடாக இப்படம் திரைகாணும் எனப் படக்குழுவினர் தெரிவித் துள்ளனர். 'அச்சம் என்பது மடமையடா' படத்தைத் தொடர்ந்து, தற்போது 'எனை நோக்கி பாயும் தோட்டா' வில் கவனம் செலுத்தி வருகிறார் இயக்குநர் கவுதம் மேனன். படத் தின் கதாநாயகன் தனுஷ். அவருக்கு ஜோடியாக நடிப்பவர் மேகா ஆகாஷ். இப்படத்தை 'ஒன்ராக் எண்டர்டெயின்மண்ட்' மற்றும் 'எஸ்கேப் ஆர்டிஸ்ட்' நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. விரைவில் ஒரு பாடலை மட்டும் வெளியிட்டு, இசையமைப் பாளர் யார் என்பது அறிவிக்கப்படும் என்று படக்குழுவினர் தெரிவிக் கின்றனர்.

'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தில் தனுஷ், மேகா ஆகாஷ்.