நீண்ட நாட்களாகத் தயாரிப்பில் இருந்துவரும் 'வீர சிவாஜி', டிசம்பர் 16ஆம் தேதி வெளியாகும் என அறிவித்திருக்கிறார்கள். கணேஷ் விநாயக் இயக்கத்தில் விக்ரம் பிரபு, ஷாமிலி, ராஜேந்திரன், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகி உள்ள இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். நந்தகோபால் தயாரித்துள்ளார். இப்படம் செப்டம்பர் 23ஆம் தேதி வெளியாக இருந்தது. எனினும் அச்சமயம் வேறு சில படங்கள் வெளியீடு கண்டதால் 'வீர சிவாஜி'யின் வெளியீடு தள்ளிப்போனது.
டிசம்பர் 16ஆம் தேதி வெளியீடு காண்கிறது 'வீர சிவாஜி'
1 mins read
-

