"நந்திதாவுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது"

"நந்திதாவுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது"

1 mins read
459e44e1-b72b-4812-94de-4ad77186edce
-

'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தின் முன்னோட்டக் காட்சிகள் அண்மையில் இணையத்தளங்களில் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்துள்ளன. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு படத்தை இயக்கியிருப்பதில் உற்சாகமாக இருக்கிறார் இதன் இயக்குநர் செல்வராகவன்.

"அண்மைக் காலத்தில் எல்லா படங்களும் ஒரே சாயலாக இருப்பதுபோல் தோன்றியது. ஏதாவது வித்தியாசமான, புதிய திரைக்கதையுடன் ஒரு படத்தை எடுக்க வேண்டும் என்று நினைத்தேன். அப்படி உருவானதுதான் 'நெஞ்சம் மறப்பதில்லை'.