நேற்று காலை முதல் அனைவரின் கைத்தொலைபேசியிலும் கேட்கும் ஒரே பாடல் 'அம்மா'வைப் பற்றிய இரங்கல் பாடல்தான். நெஞ்சத்தை உருக்கும் விதத்தில் இந்தப் பாடலை எழுதி இருக்கிறார் இலங்கையைச் சேர்ந்த பாடலாசிரியர் அஸ்மின். இவர் அங்குள்ள தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகப் பணியாற்றிக்கொண்டு, தமிழ்நாட்டில் திரைப்படங்களுக்கும் பாடல் எழுதி வருகிறார். விஜய் ஆண்டனி இசையமைத்து நடித்த 'நான்' படத்தில் இடம் பெற்ற 'தப்பெல்லாம் தப்பேயில்லை' என்ற பாடலையும், ஆர்யாவின் தம்பி சத்யா நடித்த 'அமர காவியம்' படத்தில் இடம் பெற்ற 'தாகம் தீர' என்ற பாடலையும், சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்த 'சும்மாவே ஆடுவோம்' படத்தில் சில பாடல்களையும் எழுதியிருக்கிறார்.
'அம்மா'வுக்கு முதல் இரங்கல் பாடலை எழுதிய கவிஞர் அஸ்மின்
1 mins read
-

