ஒரு சில தெலுங்கு, கன்னடப் படங்களில் நடித்துக்கொண்டிருந்த ஸ்ரேயா அண்மையில் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' என்ற படத்தில் சிம்புக்கு ஜோடியாக நடித்திருந்தார். அந்தப் படத்தின் மூலம் தனக்கு மேலும் பல தமிழ்ப் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று காத்திருந்தார் ஸ்ரேயா. அதன்படி தற்போது மித்ரன் ஜவகர் இயக்கவுள்ள புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். இந்தப் படத்தில் அவருடன் ராய் லட்சுமி, அருந்ததி நாயர் ஆகியோரும் நடிக்கிறார்கள். மூன்று பெண்களின் வாழ்க்கையில் நடக்கும் பிரச்சினைகளை மையமாக வைத்து உருவாகும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகிறது.
மீண்டும் தமிழில் ஸ்ரேயா
1 mins read
-

