காதலியை மணக்கிறார் நடிகர் அஸ்வின்

காதலியை மணக்கிறார் நடிகர் அஸ்வின்

1 mins read
2b8f75db-d023-4925-a607-fbe0b77df813
-

நடிகர் அஸ்வின் விரைவில் தனது காதலியை மணக்க உள்ளதாகச் செய்தி வெளியாகியுள்ளது. கவுதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த 'நடுநிசி நாய்கள்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகர் அஸ்வின் கக்குமனு. அதன்பிறகு, 'மங்காத்தா', 'பிரியாணி', 'மேகா', 'வேதாளம்', 'ஜீரோ' ஆகிய படங்களில் நடித்தார். இந்நிலையில், அஸ்வினுக்கும் சோனாலி என்ற பெண்ணுக்கும் விரைவில் திருமணம் நடக்க இருக்கிறது. இருவரும் பல ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர். ஜவுளித் தொழில்நுட்பத்தில் பட்டப்படிப்பை முடித்துள்ள சோனாலி, தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு குறும்படம் ஒன்றை இயக்கிய அஸ்வின், அதில் நடிக்க சோனாலியைத் தேர்வு செய்திருந்தாராம். அப்போது ஏற்பட்ட நட்பு, இருவருக்குள்ளும் காதலாகி தற்போது திருமணம் வரை வந்திருக்கிறது. இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் பச்சைக் கொடி காட்டியுள்ளனர். இந்த மாத இறுதிக்குள் இவர்களது திருமணம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.