மீண்டும் தமிழுக்கு வருகிறார் சனா

'சென்னை 600028' படத்தின் இரண்டாம் பாகத்தில், ஜெய்க்கு ஜோடியாக நடித்தவர் சனா அல்தாஃப். இவர் கேரளாவின் கொச்சி நகரைச் சேர்ந்தவர். பதினேழு வயதாகும் சனா தற்போது பன்னிரெண்டாம் வகுப்பு பயில்கிறார். "என் சொந்த ஊர் கொச்சி தான். என் தந்தை திரைப்படங்களில் பணியாற்றுவது உட்பட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டிருக் கிறார். என் அம்மாவும் அப்பாவின் பணிகளில் உதவிகரமாக இருக்கிறார். தற்போது பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கிறேன். அதனால் எனது முழுக்கவனமும் கல்வியில் தான் உள்ளது," என்கிறார் சனா அல்தாஃப். சினிமாவில் நடித்தது எப்படி? "நான் ஒன்பதாம் வகுப்புப் படிக்கும்போது திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்தது. துல்கர் சல்மான் நடித்த 'விக்கிரமாதித்யன்' படத்தில் அவரது தங்கையாக நடித்தேன்.

அதன் பிறகு பகத் பாசிலுக்கு ஜோடியாக 'மரையம் முக்கு' படத்தில் நடித்தேன். மஞ்சு வாரியர் நடித்த 'ராணி பத்மினி' படத் திலும் சிறிய கதாபாத்திரத்தில் தோன்றினேன். "அதன் பிறகு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் கவனம் செலுத்துவதற்காக சினிமா வுக்கு இடைவெளி விட்டுவிட்டேன். மீண்டும் நடிக்கலாம் என்று நினைத்தபோது தமிழில் 'சென்னை 600028' படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன்மூலம் சினிமாவில் மீண்டும் காலடியெடுத்து வைத்துள்ளேன்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!