காவல்துறையின் உதவியைக் கோரியுள்ள ராகவா லாரன்ஸ்

காவல்துறையின் உதவியைக் கோரியுள்ள ராகவா லாரன்ஸ்

1 mins read
136078ce-7294-4393-8e33-b60360c3c7e5
-

'மொட்ட சிவா கெட்ட சிவா' படத்தை வெளியிடுவதில் சிக்கல் இருப்பதால், படம் வெளிவர உதவிகேட்டு சென்னை காவல்துறை ஆணையரை சந்தித்துப் பேசியுள்ளார் அதன் நாயகன் ராகவா லாரன்ஸ். "மொட்ட சிவா கெட்ட சிவா' படம் படப்பிடிப்பு முடிந்து திரையிடுவதற்கு தயார் நிலையில் உள்ளது. ஆனால், படத்தை வெளியிடுவதில் சிக்கல் இருக்கிறது. படம் வெளியாக உதவி செய்யும்படி காவல்துறையிடம் கோரிக்கை வைத்துள்ளோம். "இப்படத்தை வேந்தர் மூவிஸ் அதிபர் மதனும் 'சூப்பர் குட்ஸ்' படநிறுவன அதிபர் ஆர்.பி.சவுத்ரியும் இணைந்து தயாரித்தனர். பின்னர் வேறொரு பிரச்சினைக்காக மதன் சிறையில் உள்ளார். அதன்பிறகு ஆர்.பி.சவுத்ரி படத்தை தயாரித்துள்ளார். மதன் சிறைக்குப் போய்விட்டதால் படம் வெளியா வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே போலிஸ் உதவியை நாடினோம்," என்கிறார் ராகவா லாரன்ஸ்.