விஜய் வசந்த்: மறக்கவே முடியாத அனுபவங்கள்

"சினிமாவுக்கு வருவேன் என்று நினைக்கவே இல்லை. வந்ததே ஆச்சரியமாக இருக்கிறது. அதற் குள் பரபரவென பத்து ஆண்டுகள் ஓடிவிட்டன. திரும்பிப் பார்த்தால் எல்லாம் கனவு போலவே தோன்று கிறது," என்று 'சென்னை 600028' படத்தின் இரண்டாம் பாகம் வெற்றியடைந்துள்ள பரவசத்தில் பேசுகிறார் விஜய் வசந்த். 'அச்சமின்றி' படத்தின் வெளியீடு தாமதமாகுதே? "தாமதமாக வந்தாலும் கூட 'நச்'சென்று கூர்மையான படமாக உருவாகியுள்ளது. படத்தின் தலைப்பைப் பார்த்துவிட்டு நிறைய பேர் அடிதடி படமா எனக் கேட்கி றார்கள்.

இது முக்கியமான விவா தத்தை கிளப்பப் போகிற படம். "இன்றைய சூழலில் கல்வித் தரம் குறித்த கேள்விகளை எழுப் பும் கதை. நான் நடித்த படங்களில் 'என்னமோ நடக்குது' எனக்கு ரொம்ப பிடித்தமானது. ரசிகர்கள் என்னை நாயகனாக முழுமையாக ஏற்றுக்கொண்ட படம் அதுதான். "அப்படத்துடன் ஒப்பிடும்போது 'அச்சமின்றி', அதற்கும் மேலே எனலாம். வழக்கமான வணிக சினிமாவுக்கான மசாலாவோடு சமூகத்துக்குத் தேவையான சிந்த னையையும் சரியான அளவில் கலந்திருக்கிறோம். "அரசுப் பள்ளிகளுக்கும் தனியார் பள்ளிகளுக்குமான வித்தியாசங்களை ரொம்ப விரிவாகக் கூறியுள்ளோம். ஒவ் வொருவரும் பார்க்கவேண்டிய படமாக மட்டுமல்ல; பாடமாகவும் 'அச்சமின்றி' இருக்கும்."

'அச்சமின்றி' படத்தில் விஜய் வசந்த், சிருஷ்டி டாங்கே.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!