காஜல் புகழ் பாடும் படக்குழுவினர்

காஜல் புகழ் பாடும் படக்குழுவினர்

1 mins read
62edb1ef-e17e-4989-b694-d1ea1f86c699
-

அஜித்துடன் இணைந்து ஒரு படத்திலாவது அவருக்குத் தங்கையாக நடித்துவிடவேண்டும் என்று வளரும் நடிகைகள் ஏங்குகின்றனர். முன்னணி நடிகைகளோ ஒரு படத்திலாவது அவருடன் நடித்துவிடவேண்டும் அல்லது ஒரு பாடலுக்காவது அவருடன் ஆடிவிட வேண்டும் என்று ஏங்கும் நடிகைகளில் காஜல் அகர்வாலும் ஒருவராக இருந்தார். தற்பொழுது அவருடைய ஆசை நிறைவேறிவிட்டது.

அவர் விஜய்யுடன் 'துப்பாக்கி', 'ஜில்லா' படங்களில் நடித்தபோது அஜித்துடன் ஒரு படத்திலாவது ஒரு பாடலுக்கு ஆடவேண்டும் என்பதில் உறுதியாக இருந்து வந்தார். ஆனால் அவர் இதோ கிடைத்துவிடும் என்று நினைத்த நேரத்தில் கிடைக்காத அஜித் பட வாய்ப்பு இனிமேல் கிடைப்பதற்கான வாய்ப்பு இல்லை என்று அவர் நினைத்துக் கொண்டிருந்த நேரம் பார்த்து காஜல் வீட்டுக் கதவைத் தட்டியது.