வெளியாகும் முன்பே 'பைரவா'வின் சாதனை

வெளியாகும் முன்பே 'பைரவா'வின் சாதனை

1 mins read
c41d3617-418b-4fa0-8ccf-4fd79ba648cc
-

வெளியான 3 நாட்களில் 5 மில்லியன் பார்வைகளைக் கடந்து விஜய்யின் 'பைரவா' முன்னோட்டம் சாதனை படைத்துள்ளது. விஜய், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் பைரவா. 'அழகிய தமிழ்மகன்' புகழ் பரதன் இயக்கியிருக்கும் இப் படத்தை விஜயா வாஹினி புரொடெக்ஷன்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித் துள்ளது. பொங்கல் வெளியீடாக வர இருக்கும் இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகளில் படக் குழு தற்போது மும்முரமாக உள்ளது.

இந்நிலையில் புத்தாண்டை முன்னிட்டு வெளியான இப்படத் தின் முன்னோட்டம் இணையத் தில் தற்போது 50 லட்சம் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் மிகப்பெரும் உற்சாகத் தில் திளைத்து வருகின்றனர். பொங்கலுக்கு வெளியாகும் எனக் கூறப்பட்டாலும், படத்தின் அதிகாரபூர்வ வெளியீட்டுத் தேதியைப் படக்குழு இன்னும் அறிவிக்கவில்லை. இதற்கிடையே 'விஜய் 61' படத்தில் விஜய்க்கு வில்லனாக இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா நடிக்கப்போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

'பைரவா' படத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ்