மும்பைத் தாக்குதல் கதையில் த்ரிஷா

2008ல் நடைபெற்ற மும்பைத் தாக்குதலை மையமாகக் கொண்ட கதையில் திரிஷா நடிக்க இருக்கிறார். தமிழின் முன்னணி நாயகிகளில் ஒருவரான திரிஷா அண்மைக்காலமாக தனது நடிப்புத் திறமையை நன்கு வெளிப்படுத்த வாய்ப்புள்ள படங்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார். அந்த வகையில் அவர் அடுத்ததாக நடிக்கவிருக்கும் படம் '1818'. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்தை ரிதுன் சாகர் இயக்குகிறார்.

இசையமைப்பாளராக எஸ்.எஸ்.தமனும் பாடல்களுக்கு மதன் கார்க்கியும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். 2008ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. திரிஷா தற்போது மாதேஷ் இயக்கும் 'மோகினி', அரவிந்த்சாமி ஜோடியாக 'சதுரங்க வேட்டை 2' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இது தவிர விஜய் சேதுபதி ஜோடியாக திரிஷா நடிக்கும் '96' படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!