சாவித்திரி கதையில் இரு நாயகிகள்

தமிழ், தெலுங்கு உள்பட தென்னிந்திய மொழிகளில் முந்நூற் றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாகத் திகழ்ந்த பழம் பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு, திரைப்படமாகத் தயாராகிறது. இதில் சமந்தா, கீர்த்தி சுரேஷ் என இரண்டு நாயகிகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. 'பாசமலர்', 'தேவதாஸ்', 'திருவிளை யாடல்', 'களத்தூர் கண்ணம்மா' போன்ற சாவித்திரி நடித்த படங்கள் அனைத்தும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

கதாநாயகிகளில் அதிக சம்பளம் வாங்கியவர், முதன்முதலாக சென் னையில் நீச்சல் குளத்துடன் ஆடம் பர பங்களா கட்டி வாழ்ந்த நடிகை என்ற பெருமைகள் அவருக்கு உண்டு. கடைசிக் காலத்தில் சொந்தப் படம் தயாரித்து நஷ்டமடைந்து, சம்பாதித்த பணம், சொத்துகளையெல்லாம் இழந்து, ஏழ்மை நிலையில் நோய்வாய்ப்பட்டு பல மாதங்கள் கோமா நிலையில் இருந்து உணர்வு திரும்பாமலேயே பரிதாபமாக இறந்தார் சாவித்திரி. அவரது வாழ்க்கை வரலாற்றைத் தெலுங்கு இயக்குநர்நாக அஸ்வின் படமாக எடுக்கிறார். இதற்கான திரைக்கதையைப் பழைய நடிகர் நடி கைககள் மற்றும் சாவித்திரியின் குடும்பத்தினரை சந்தித்துப் பேசி தயார் செய்து இருக்கிறார். தமிழ், தெலுங்கு மொழிகளில் இப்படம் தயாராகிறது. இரண்டு கதாநாயகிகள் இதில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே நித்யா மேனன், வித்யாபாலன் ஆகியோர் பரிசீலிக்கப்பட்டனர்.

தற்போது சமந்தா, கீர்த்தி சுரேஷ் ஆகிய இருவரும் இதில் நடிக்க இருப்பதாகவும் அவர்களிடம் இது குறித்து பேச்சுவார்த்தை நடப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இவர்களில் சாவித்திரி கதாபாத்திரத்தில் நடிப்பவர் யார் என்பது விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!