லுத்ஃபுதீன்: நடிகனாவேன் என எதிர்பார்க்கவே இல்லை

'பறந்து செல்ல வா' படத்தின் மூலம் நாயகனாக அறிமுகம் ஆனவர் நடிகர் சங்கத் தலைவரும் நடிகருமான நாசரின் மகன் லுத்ஃபுதீன். நடிக்க வேண்டும் என முன்பே திட்டமிட்டு தான் திரைத்துறையில் பிரவேசிக்கவில்லை என்கிறார். "ஒரு மருத்துவரின் மகன் மருத்துவராவது போல், ஒரு நடிகரின் மகன் நடிகராக வேண் டும் என்பதற்காகத்தான் நான் சினிமாவில் கால்பதித்தேனா எனப் பலரும் கேட்கிறார்கள். அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. "'விருமாண்டி' சண்முகராஜன் அப்பாவுக்கு நல்ல நண்பர்.

'சைவம்' படத்துக்கான நடிகர்க ளைத் தேர்வு செய்துகொண்டிருந்த நேரம் அது. அச்சமயம் யதேச்சை யாக நான் அவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. 'உன்னால் நன்றாக நடிக்க முடியும், முயற்சி செய்து பார்' எனக் கூறி, என்னை இயக்குநர் விஜய் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தார். "நான் நிச்சயம் தேர்வாக மாட்டேன் என அவநம்பிக்கையுடன் இருந்தேன். ஆனால், சில தேர்வுக ளுக்குப் பின் என்னை 'சைவம்' படத்தில் நடிக்க வைத்தார் விஜய். இப்படித்தான் என் திரைப்பயணம் தொடங்கியது." "பள்ளிப் படிப்பை முடித்ததும் மலேசியாவுக்குச் சென்று அனிமே ஷன் படித்தேன். எதிர்காலத்தில் திரைப்படங்கள் இயக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. அங்கே போனபின் இசையின் மேல் ஆர் வம் ஏற்பட்டது. நானே எதிர்பார்க்கா மல் இப்போது நடிகன் ஆகிவிட் டேன். நிஜ வாழ்க்கையில் இருந்து கொஞ்சம் மாறுபட்ட வேடங்களில் நடிக்க வேண்டும் என்பதே என் ஆசை," என்கிறார் லுத்ஃபுதீன்.

'பறந்து செல்ல வா' படத்தில் லுத்ஃபுதீன், ஐஸ்வர்யா.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!