ஜெய்-அஞ்சலி திருமணம் விரைவில்

தெலுங்குப் படங்களில் நடிக் காமல் மௌனம் காத்து வரும் அஞ்சலி திருமணம் செய்ய உள்ளதாக டோலிவுட்டில் கிசுகிசு பரவி வருகிறது. 'எங்கேயும் எப்போதும்' உள் ளிட்ட பல்வேறு படங்களில் ஜெய்யுடன் அஞ்சலி இணைந்து நடித்தார். ஜெய் நடிப்பில் திரைக்கு வரவிருக்கும் 'எனக்கு வாய்த்த அடிமைகள்' படத்திலும் கெஸ்ட் ரோலில் அஞ்சலி நடித்துள்ளார். இவர்கள் இருவரும் திரு மணம் செய்துகொள்ள உள்ள தாக டோலிவுட்டில் பேசப்படு கிறது. ஆனால் ஜெய், அஞ்சலி காதலிப்பதாக ஏற்கெனவே பல முறை கிசுகிசு வெளிவந்திருந்தது. அதை அப்போது ஜெய் மறுத்து வந்தார். அஞ்சலி இப்போது தமிழில் 'தரமணி', 'காண்பது பொய்', 'பேரன்பு', 'பலூன்' உள் பட ஐந்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார். ஏற்கெனவே அவர் விஷாலுடன் நடித்து முடித்திருக்கும் 'மத கஜ ராஜா' முடிவடைந்து திரைக்கு வராமல் தள்ளிப்போயுள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!