‘இதெல்லாம் நடிப்புதானே? சும்மா கொடுங்கள்’ என உசுப்பேத்திய நாயகி

'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தில் இதழில் முத்தம் பதிக் கும் காட்சியில் நடிப்பதற்கு கூச் சப்பட்டு தனுஷ் நெளிந்தாராம். கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், புதுமுகம் மேகா ஆகாஷ் நடித்துள்ள படம் 'எனை நோக்கி பாயும் தோட்டா'. படத்தின் இசை யமைப்பாளர் பெயரைத் தெரிவிக் காமல் ரகசியமாக வைத்திருந் தார் கவுதம். இந்நிலையில்தான் இசையமைப்பாளர் தர்புகா சிவா என்பது தெரியவந்தது. படத்தில் தனுஷ், மேகா ஆகாஷ் இடையே சில முத்தக் காட்சிகள் உள்ளதாம். தனுஷ் இந்தக் காட்சிகளில் அசத்தி யிருப்பார் என்று நீங்கள் நினைத் தால் அது தவறு.

மேகாவுக்கு எப்படி முத்தம் கொடுப்பது என தனுஷ் ரொம்பவே தயங்கி வெட்கத்தால் நெளிந்தாராம். இதைப்பார்த்த மேகா அட நடிப்புதானே சார்... சும்மா முத்தம் கொடுங்கள் என்று தனு‌ஷுக்குத் தைரியம் கூறினாராம். "இந்த தனுஷ் என்ன இப்படி வெட்கப்படுகிறார்? முத்தக்காட் சிகளை எப்படி படமாக்குவது," என்று படக்குழுவினர் தவித்த போது மேகா அவருக்குத் தைரியம் கூறி நடிக்கவைத்தது அவர்களை நிம்மதி அடைய வைத்ததாம். மேகா மட்டும் தைரியம் கூறாமல் இருந்தால் தனுஷ் அந்தக் காட்சிகளில் நடித்திருக்க மாட்டார் என்கிறார்கள். இந்தக் காட்சிகளைத் திரையில் பார்ப்ப தற்கு எந்த அருவருப்பும் இருக்காது என்றும் கூறப்படுகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!