விஜய் சேதுபதி: தமிழ்த் திரையுலகத்திற்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்

தமிழ்த் திரை­யு­ல­கம் எனக்கு நிறையக் கொடுத்­தி­ருக்­கிறது என்று (கையை அக­ல­மாக விரித்­துக்­ காட்­டு­கிறார்) விஜய் சேதுபதி. நான் இந்தச் சினி­மா­வுக்கு நிறைய நன்­றிக்­க­டன் பட்­டி­ருக்­கேன். நான் காசு, பணத்தைச் சொல்­ல­வில்லை. நிறையப் பேர்­களின் அன்பைக் கொடுத்­தது; நிறைய தைரியம் கொடுத்­தது; வாழ்க்கையைக் கற்றுக்கொ­டுத்­தது; நிறைய சவால்­களைக் கொடுத்தது என்று மனம் திறக்­கிறார் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி. "சினி­மா­வுக்கு வரு­வதற்கு முன்னால் காசு சம்பா­தித்­தால் எல்லாம் சரியாகிவிடும் என்று ஒரு நம்­பிக்கை இருந்தது. ஆனால் காசு, பணம் சம்பா­தித்த பிறகு எதுவும் சரி­யா­காது என்று இப்போது தோன்­று­கிறது.

"இப்போது நான் சினிமா பந்தயத்தில் காலை வைத்­து­விட்­டேன். இனிமேல் நான் நினைத்­தா­லும் அதிலிருந்து வெளியேற முடியாது. இங்கே ஓடிக்­கொண்­டே­தான் இருக்­க­வேண்­டும். ஏன் இப்படி நடக்­கிறது என்று முன்னாடி தோன்றும். இப்போது இது இப்­ப­டித்­தான் நடக்­கும் என்று புரிந்­து­கொண்டு விட்டேன்.

தமிழ்ச் சினி­மா­வில் விஜய் சேது­ப­திக்­கான இடம் என்ன?

"நான் எந்த இடத்தை­யும் எதிர்­பார்க்­க­வில்லை. எதையும் மகிழ்ச்சியாக மன நிறைவாகச் செய்­ய­னும் என்று முயற்சி செய்­கி­றேன். தொடர்ந்து படங்க­ளாக நடிக்­க­வேண்­டும் என்ற எண்ணம் என்­னி­டம் கிடையாது. எனக்­கும் மக்­களுக்­கும் பிடித்த மாதிரி படங்கள் தர­வேண்­டும். "இந்த வருடம் தொடர்ந்து படப்பிடிப்புகள் இருக்கின்றன. நான் என் குடும்பத்தினருடன் அதிக நேரம் இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால் அது நடைமுறையில் ஒத்து வருமா என்று தெரியவில்லை. ஒத்துக் கொண்ட படங்களை நன்றாக நடித்து மக்கள் விரும்பும் படங்களாகத் தரவேண்டும் என்பதே என் ஆசை," என்கிறார் விஜய் சேதுபதி.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!