முடிவுக்கு வந்தது 'பாகுபலி 2' படப்பிடிப்பு

முடிவுக்கு வந்தது 'பாகுபலி 2' படப்பிடிப்பு

1 mins read
26946666-f2ce-4824-b08f-a1c56fd0276d
-

தமிழ், தெலுங்கு, இந்தி மொழிக ளில் தயாராகி வருகிறது 'பாகுபலி' படத்தின் 2ஆம் பாகம். ராஜமவுலி இயக்கத்தில் தயாரான 'பாகுபலி' முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இப்போது அதன் இரண்டாம் பாகம் பிரம் மாண்டமாகத் தயாராகி வருகிறது. கடந்த ஓராண்டு காலமாக 'பாகுபலி 2ஆம் பாகத்தின் படப் பிடிப்பு நடந்து வந்தது. தற்போது படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன. 'பாகுபலி' இரண்டு பாகங் களையும் சேர்த்தால் மொத்தம் 613 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்று இருக்கிறது.

இந்தியத் திரையுலகில் வேறு எந்தப் படத்துக்கும் இவ்வளவு நாள் படப்பிடிப்பு நடந்ததில்லை என்கிறார்கள் படக்குழுவினர். 'பாகுபலி' படத்துக்காக மட்டும், பிரபாஸ் தன்னை மூன் றரை வருடங்கள் ஈடுபடுத்திக் கொண்டார் என்று இயக்குநர் ராஜமவுலி பாராட்டியுள்ளார். இத்தனை நாள் ஒரே குடும்ப மாக 'பாகுபலி' படப்பிடிப்பில் பங்கேற்ற படக்குழுவினர் மன நெகிழ்ச்சியுடன் காணப்பட்டனர். ஒருவரை ஒருவர் பிரிவது குறித்து வருத்தப்பட்டார்கள். படப்பிடிப்பின் நினைவுகளைப் பகிர்ந்துகொண்ட படியே நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தனர். இது குறித்து இணைய தளத் தில் தெரிவித்துள்ள ராஜமவுலி, ஒரு பூசணிக்காய் படத்தை வெளியிட்டு "இன்று 'பாகுபலி' படப்பிடிப்பு நிறைவு" என்று குறிப்பிட்டுள்ளார். இது போல் பிரபாஸ் ஒரு பூசணிக்காயுடன் காட்சியளிக்கும் ஒரு படத்தையும் வெளியிட்டுள்ளார்.