இனிகோ பிரபாகர்: வெற்றியே நல்ல கூலி

இனிகோ பிரபாகர்: வெற்றியே நல்ல கூலி

1 mins read
6e9061e2-a848-479b-a994-5b589008a024
-

பாராசரா பிலிம்ஸ் சார்பில் பரீத் தயாரித்து இயக்கும் படம் 'வீரை யன்'. இதில் இனிகோ பிரபாகர், ஷைனி, ஆடுகளம் நரேன் உள்பட பலர் நடித்துள்ளனர். அண்மையில், இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென் னையில் நடந்தது. பாடல்களை இயக்குநர் சீனு ராமசாமி வெளி யிட, இயக்குநர்கள் சற்குணம், எஸ்.ஆர்.பிரபாகரன் பெற்றுக் கொண்டனர். விழாவில் இயக்கு நர் சீனு ராமசாமி சுவாரசியமாகப் பேசினார். "இந்த மாதிரியான படங்கள் தான் தமிழ்த் திரையுலகில் பல புதிய சக்திகள் பிறக்கும் வழி யைத் திறக்கிறது. பல திறமை யான கலைஞர்களை வழங்குவ தன் மூலமாக தமிழ் சினிமா விற்கு இத்தகைய படங்கள் புது ரத்தம் பாய்ச்சுகின்றன. "இப்படத்தின் கதாநாயகன் இனிகோ பிரபாகரன், தமிழ் சினிமாவில் இன்று இருக்கக் கூடிய முன்னணி கதாநாயகர்கள் அத்தனை பேருக்கும் நிகரான ஒரு நடிகர். எனக்கும் இனிகோ பிரபாகரனை வைத்து ஒரு படம் இயக்கும் ஆசை இருக்கிறது.

'வீரையன்' படத்தின் ஒரு காட்சியில் இனிகோ பிரபாகர், ஷைனி.